பொங்கலோ பொங்கல்

தை மகள் வந்தால் ....
தரணியை வென்றால்
தாய்மையை தாங்கி நின்றால்

மஞ்சளில் காப்பு கட்டி
புது பானையில் பொங்கல் வைத்து
மங்கள இசை முழங்க
பொங்கலோ பொங்கல் என
பொங்கிடும் மனதுடன்
வாழ்த்துதல் கூறி
வாழ்க்கையை தொடங்கு

தமிழனின் பெருமை எல்லாம்
அறுவடை கூருமப்பா
வீரமும் தீரமும்

உழவனின் பாதம் பணிந்து
வணங்கிட வேண்டுமப்பா
வாழ்க்கையை இனிதே வாழ்வது போல
உழவனை வாழ்விக்க உறுதி கொள்வோம்

வார்த்தையில் ஒலித்தது
வாழ்கையில் உதித்திட வேண்டுமப்பா
பொங்கட்டும் இல்லத்தில் சந்தோசம்
தங்கட்டும் நல் உள்ளத்தில் என்றென்றும்

எழுதியவர் : kanagarathinam (12-Jan-14, 11:33 pm)
Tanglish : pongalo pongal
பார்வை : 81

மேலே