அறுவடைத்திருநாள்

ஆடி என்றாலே
ஓடிவரும் நீரைக்கண்டு
உளம் மகிழ்ந்த என் அப்பா எனும் விவசாயி

நீர்தேக்கி
ஏர்வுழுது
பாத்திகட்டி
இயற்க்கை உரமிட்டு
நெல்விதைத்து
நாத்து நட்டு
களைபரித்து
அறுவடைசெய்த
நெல்மணிகளை தேக்கிவைத்து
பாதுகாத்த
என் பட்டனின் வித்து
அதுதான் எங்கள் தலைமுறையின்
சொத்து......


உணவுகொடுத்து உயிர்காத்த
இயற்கையெனும் இறைவனுக்கு
நன்றிகடன் செய்ய
உழவர்தினம் உருவாக்கி......
செழிப்பாய் வளர்ந்திட்ட
செங்கரும்பு நட்டு
புதுப்பானை வாங்கி மஞ்சளும் சூடி
புத்தரிசி பொங்கலிட்டு
பொங்கலோ பொங்கல்எனும்
ஆனந்தகுரலெழுப்பி..
கொடுத்த உணவுகளின் முதல்வனுக்கு
வணங்கி படைத்திடுவோம்
குடும்பத்துடன் நன்றிகடன் செலுத்திடுவோம்...



காளைகளையும்
எருதுகளையும்
கம்மாக்கரையில்
கழுவி குளிப்பாட்டி...

கலர் கலராய்
வண்ணம்பூசி
கட்டைவண்டி பூட்டி
ஊராருடன் ஒன்றிணைந்து

வீதி உலா சென்று
பொங்குக மங்கலம் எனும் புன்னகை கரவொலியோடு
மற்றட்ட மகிழிச்சியுடனும்..
இயற்கையுடன்
சேர்ந்து உழைத்திட்டஎங்களின்
கால்நடைகளான
குடும்ப நண்பர்களுக்கும்
நன்றிகடன் செலுத்திடுவோம்........

எழுதியவர் : ROSHINIJVJ (13-Jan-14, 12:10 am)
பார்வை : 149

மேலே