காந்தியின் அகிம்சை

மாண்புமிகு மகாத்மாவே !

அன்று!

வன்முறையை கையில் கொண்டு
நம்மை கொடுமை செய்த
ஆங்கிலேயர்களை வெளியேற்றினாய் நீ
அகிம்சையை கையில் கொண்டு

இன்று !

வஞ்சகம் கொண்டு மக்களே மக்களை கொல்கின்றனர் !...
இக்கொடுமைகளை காணும் பலரும் மௌனம் சாதிக்கிறார்கள் ....(?)
ஏன் என்று கேட்டால்....

இதன் பெயர் தான் அகிம்சயாம் அவர்களுக்கு !

கருப்பு அங்கி அணிந்த காந்தியமே !
சட்டம் கண்ட சத்தியமே !
உன்னை போற்றுவர் இங்கு பலர் உண்டு -
ஆனால் பின்பற்றுவோர் சிலரே !

பணம் என்ற காகிதத்தில் மட்டும்
நீ அச்சடிக்கப்படவில்லை என்றால்
நீ யார் என்று கேட்பார்கள் (?)
எம் தாய்திருநாட்டினர்.

வேற்றுமையை தகர்த்த வெற்றியாளனே !

போற்றுகிறேன் உன்னை இத்தாய்திருநாட்டில் பிறந்தமையால் ! -
மகிழ்ச்சியடைகிறேன் நான் இந்நாளில் நீ இங்கு இல்லாமையால்!

எழுதியவர் : மோகனா இராஜராஜேந்திரன் (13-Jan-14, 12:15 am)
Tanglish : gaandhiyin agimsai
பார்வை : 1490

மேலே