உயிர் மெய்

இதயம் ஒன்றும் துடிப்பதை மறக்கும்
வார்த்தை உன் வாய் சொல்லுமோ
என்றும் நான் உனக்கென்று
இனிதாக கொள்ளுமோ .,

கரு விழி இரண்டும் - என்
கனவினை இறையாக கொள்ளுமோ,
கல்லான என் மனமும்
கரைந்தே தான் போகுமோ.,

காலம் முன்றும் சேர்ந்த உன் மேனி
தீவென்றே ஆகுமோ - அதில்
தடம் பதித்த என் காதல்
கானல் என்றே மாறுமோ..,

ஆகாது .....ஆகாது .....

காதலில் என் ஆயூளும் அதிகம் ,
என் காதலின் ஆழமும் அதிகம் ,
வா...,
என் உயிர் ஆகிய நீஉம்
உன் மெய்யாகிய நானும் -சேர்ந்து,
காதல் என்ற உயிர் மெய் செய்வோம் ......

எழுதியவர் : santhosh (13-Jan-14, 12:58 am)
சேர்த்தது : santhosh bhavan
Tanglish : uyir mei
பார்வை : 107

மேலே