அத்தை தை மகளே வருகவே

நித்திரையில் வந்திட்ட அத்தை மகளே
சித்திரையில் நித்திரை கலைத்தவளே - இந்த
தையும் பிறந்ததடி தரையும் குளிர்ந்ததடி
தங்க மணி நெல்லும் களத்துக்கு வந்ததடி

துள்ளி குதிக்கும் அயிர மீனு கன்னழகி
என்ன தூங்க விடாம செஞ்ச பென்னழகி
நீ சிந்திய சிரிப்புல செதஞ்சி போச்சி இந்த
மாமன் மனதடி -சீக்கிரமா ஒரு சேதி சொல்லடி

வட்டப் பொட்டழகி வாளிப்பான உடலழகி
குளிர் மொட்டவிழ்ந்த முகத்தழகி
செங்கரும்புச் சாரான சொல்லழகி-கோவைப்
பழம் போன்ற சிவப்பு உதட்டழகி - இந்த

மாமனுக்கு காணி நிலமிருக்கு -அதிலே
இரண்டு தென்னை உன்னைப்போல் தென்னங்
கனியோடு வளர்ந்திருக்கு -ஓலைக் குடிசை
ஒய்யாரமாய் நின்னிருக்கு - உழைக்க இந்த
மாமனுக்கு உடம்புல தெம்பிருக்கு .......!

சீனிக் கிழங்கு தோட்டமிருக்கு - என் சிங்காரமே
நீ சீண்டி விளையாட பச்சைக் கிளி கூட்டமிருக்கு
கூடி விளையாட நானிருக்கேன் -என் கோவில்
கோபுரமே ...! எப்ப நீ வர அந்த தேதிய சொல்லிபுடு

ஓடையிலே நீர் போகும் அதிலே மீன் போகும்
குளிர் காற்றிலே பூ வாசம் போகும் அதுவும்
உன் நினைப்பை சீண்டி விடும் -அந்த நினைப்பிலே
கரஞ்சி நானும் காலனிடம் சேரும் முன்னே

கட்டான கட்டழகி என்னை காதலித்த முத்தழகி
மஞ்சள் முகத்தழகி மாம்பழ உதட்டழகி .......!
மாமன் மடியும் முன்னே மறுவார்த்தை பேசாமல்
ஓடி வந்திடடி நாம் ஒய்யாரமாய் வாழ்த்திடலாம் .!

எழுதியவர் : தங்க ஆரோக்கியதாசன் (13-Jan-14, 7:45 am)
பார்வை : 305

மேலே