பதில் சொல்
![](https://eluthu.com/images/loading.gif)
சிங்களமே பதில் சொல்
***********************
என் விழிகளில் முள்ளாய் தோன்றினாய்
இன்று என் இதயத்தில் ரண வில்லாய்
விழிகளில் அருவி விடியாத இரவுகளில்
விடியும் ஒரு இனிய பொழுதுக்காய்
தினம் தினம் ஏங்கி தவிக்கும் பிள்ளையாய்
என் மன வலிகளை யாரிடம் நான் கூறிட
அடிக்கடி கவிதைகள் பல பல கிறுக்கியே
மனமெல்லாம் வலி நிறைந்த கிறுக்கியாய்
சுருள் வலைய கொடூர இராணுவக் காவலன்
கூலிப்படையின் பல பல கொடூரங்கள் மத்தியில்
முள் வேலிக்குள் இருந்து ஏங்கி தவிக்கிறேன்
அழகான என் தாய் மண்ணின் விடிவு எப்போ
சிறு பிள்ளை எனக்கு எதற்கு பிளேட் வேலி
தமிழச்சியாக பிறந்த காரணத்தால் தானோ
கருங்குழல் துப்பாக்கி முனையில் காவல்
இரத்தம் குடிக்கும் சிங்களமே பதில் சொல்
சிறு பிள்ளையான எமக்கு எதற்கு புரியவில்லை
சிறு வயதிலே ஓட ஓட விரட்டுகிறாயே ஏன் ?
நீயும் மனித இனம் தானே அன்பு இல்லையா
சிறுவர்களை ஏன் வதைக்கிறாய் வாழ விடு
இனியும் என்னால் ஓட முடியவில்லை
கால்கள் வலிக்கிறதே மனசும் வலிக்கிறதே
என் மண்ணில் நிம்மதியாக வாழவேண்டும்
ஈழம் மலருமா என் தாய் மண் விடியுமா ...