புத்தாண்டுப் பொங்கல்

வந்தது வந்தது தைப்பொங்கல்
மாவிலைத் தோரணம் கட்டி
கூரைப்பூ ஆவரம்பூ வேப்பந்தலை சேர்த்துக்கட்டி
இல்லத்தில் சூட்டி, உள்ளத்தில் மகிழ்வு பொங்கும் தமிழனின் பொங்கல்.....!

மனை அலங்காித்து
பூசணிக்கோலம் வாசலில் இட்டு
மணம் கொண்ட மஞ்சள்
சுவை கொண்ட செங்கரும்பு
எடுத்து வந்து கதவில்சாத்தி
பரம்பரை வழிவந்த பாரம்பாியப் பொங்கல்.....!

தான்நின்று உலகியக்கும்
சூாியனின் வசந்த
அறிவிப்பு பொங்கல்....!

ஏர்முனை தன்னில் தன்
வியர்வைத் தீர்த்தமிட்டு
உலகெல்லாம் உணவு தர
பயிர்செழித்து அறுவடை செயும் உழவனின் பொங்கல்...!

நித்தம் உழைத்து உழவனின் தோழனாய் தன்வீட்டு உறவாய் வாழும் ஜீவனின் பொங்கல்...!

புத்தாடை உடுத்தி புதுப்பானை தன்னில் வண்ணக்கோலமிட்டு
புத்தாிசி அதிலிட்டு சர்க்கரை கலந்தது போல் வாழ்வில் இன்பம் சேர்க்க பொங்கும் நேரம்பார்த்து பொங்கலோ பொங்கல் யெனகூவி இயற்கையெனும் இறைவனுக்கு
படைத்து தானுண்டு மற்றோருக்கும் உற்றாருக்கும் தரும் சமத்துவப் பொங்கல்...!

வீரம் நிலைநாட்டி விளையாட்டுகள் ஆடிமகிழ்ந்து
பாிசுகள் பெறும் வீரப் பொங்கல்....!

பொங்குக பொங்கலே இல்லத்தில் செல்வம் பெருக ஏற்றமுடன் கொண்டாடுவோம் இந்த தமிழர் புத்தாண்டுப் பொங்கல்.........!

எழுதியவர் : Akramshaaa (13-Jan-14, 8:11 am)
பார்வை : 69

மேலே