பொங்கல் பாட்டு

இன்றைக்குத் தைப்பொங்கல் என்றாச்சு!
என்றைக்கும் இனிக்கும் பொங்கலாச்சு!

(இன்றைக்கு)
மழை தந்தவனுக்குப் பொங்கலாச்சு!
நெல் விளைந்ததுமே பொங்கலாச்சு!

(இன்றைக்கு)
பொங்கல் நாளே எங்கள் நாளாச்சு பொங்கல் நாளே உழவர் நாளாச்சு பொங்கல் நாளே புத்தாண்டு ஆச்சு
பொங்கல் நாளே தமிழர் நன்நாளாச்சு....

(இன்றைக்கு)
எங்க தையே பிறந்த நாளாச்சு
நம்ம தமிழுக்கு முதல் நாளாச்சு
புத்தரிசி போட்டுப் பொங்கும் நாளாச்சு ஞாயிற்றுக்கு நன்றி கூறும் நாளாச்சு...

(இன்றைக்கு)

முற்றம் மெழுகுவது அப்பா ஆச்சு கோலம் போடுவது அம்மா ஆச்சு பொங்கிப் படைப்பதும் இருவரும் ஆச்சு ஞாயிற்று வரவோடு நிறைவும் ஆச்சு...

(இன்றைக்கு)
படைத்த பொங்கலை உண்பதும் நாமாச்சு, நன்நாளில் நல்லது செய்வதும் நாமாச்சு, உறவோடு அன்பைப் பகிருவதும் நாமாச்சு
நண்பரோடு சேர்ந்து மகிழ்வதும் நாமாச்சு,

(இன்றைக்கு)

எழுதியவர் : Akramshaaa (13-Jan-14, 8:23 am)
Tanglish : pongal paattu
பார்வை : 90

மேலே