எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருள்

ஸ்கூட்டி பெப் கத்தியது
ஐயோ புலனடக்கம் தேவை...என்றே

கீ என்று கத்தவும் - கவிஞன்
ஸ்டேண்டை எடுத்து விட்டு ஓட்டினான் ....!

குக்கரும் அவசரமாய் கத்தியது
உள்ளுக்குள் பக்குவம் ஆகிவிட்டேன்....என்றே

கீ என்று கத்தவும் - கவிஞன் அதன்
கொம்பை எடுத்து தனியே கீழே வைத்தான் ....!

மனிதரில்லா தனிமையில் கவிஞனுக்கு
அக்றினையும் வேதம் சொன்னது.....

கவிஞனின் கண்களுக்கு மட்டும்
காட்சியெல்லாம் கருணை தந்தது...

கடவுளை அவன் தேடுவதில்லை - காரணம் அவன்
கண் எதிரே அனைத்தும் கடவுள்......

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (13-Jan-14, 8:29 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 57

மேலே