போகித் திருநாள் வாழ்த்துக்கள்

எதுக்கு போகி ?! என நீயும் யூகி...!
குப்பைய நீக்கி தூசிய போக்கி
சுகத்தில் சொக்கி இன்பத்தில் சிக்கி
சுத்த உளம் பெறவே வந்தது போகி..!
கவலையிருக்கா ஏதாச்சும் பாக்கி ?
கேட்கணும் கொண்டா வாக்கி டாக்கி..!
ஆமான்னும் பதில் வந்தா அத தூசி ஆக்கி..
ஆனந்தமா கொளுத்தணும் வந்தது போகி...!
உருண்டைய முழுங்குனா விக்கி விக்கி
உள்ளுக்குள்ளே அவஸ்தடா பக்கி பக்கி
உன்கர்வம் அதைப் போல் மக்கி மக்கி
உனை குப்பையாக்கும் எரி இன்று போகி....!!
நம் தமிழ் உன் வாயில் திணறி திக்கி திக்கி
பிறமொழி நலமுற மிக மினுக்கி மினுக்கி
செந்தமிழ் அணுவென நீ நுணுக்கி நுணுக்கி
செய்யும் உன் ஆசை அதை எரி இன்று போகி..!!
கையில் கட்ட ராக்கி கனத்தை தூக்க ஜாக்கி
பாட்டு நடுவே பாக்கி இடம் நிரப்ப கீக்கீ
ஓலி நிரப்பி தாக்கி - கொல்லாமல் தமிழ் நோக்கி
கும்பிட்டே நம் குறை எரிப்போம் இன்று போகி.!!!
அனைவருக்கும் போகித் திருநாள் வாழ்த்துக்கள்
============================================
( கருத்தை அறிவதில் மொழி பேதம் வேண்டாம்
படத்தைப் பாருங்கள் பண்புறு கோலம்.....!
நல்லதைச் சொல்லும் அழகிய நெளிவுகள்....!!
ஆங்கிலத்தைச் சொன்னேன் அதுவும் மிக அழகே..)
அன்புடன் ஹரி