பொங்கல் காமெடி மனைவியிடம் வாய் கொடுத்து அடிவாங்கிய கணவர்
அதிக பட்சமாக சமூக சேவையிலே ஆர்வம் காட்டிவரும் ஒரு நண்பரும், அவருடன் அவ்வபோது சொந்த பணிகளை முதலிலும் சமூக பணியை இரண்டாம் பட்ச வேலையாக பார்க்கும் மற்றொரு நண்பரின் மனைவியிடமிருந்து பொங்கலன்று தொலை பேசி அழைப்பு சமூக சேவையை முதல் பணியாகவும் மற்ற வேலையை இரண்டாம் பட்சமாகவும் செய்துவரும் நண்பரின் மனைவிக்கு வந்தது. பரஸ்பரம் பரிமாறிக்கொண்டனர் பிறகு தொலைபேசியில் அழைத்த இரண்டாம் நண்பரின் மனைவி இன்று முழுவது என் கணவர் வீட்டிலேயே இருக்கும் படி கூறியிருக்கிறேன் அவரும் சரி என்று கூறி வீட்டில் உள்ள துப்புரவு பணிகளையெல்லாம் செய்து வருகிறார் என்று கூறி சற்று வேறுப்பெற்றியுள்ளார்.
இதை கேட்ட உடனே சற்று கோபத்துடன் அந்த மற்றொரு கணவரின் மனைவி அவள் கணவரிடம் உன் நண்பர் வீட்டில் உள்ள வேலைகளையெல்லாம் செய்து கொண்டிருக்கிறார் நீயும் இருக்கிறாயே தண்டமாக ஊர் சுற்றி வர என்று கூறுகிறார்..உடனே அக்கணவர் நண்பர் வீட்டை தான் பார்பார் நான் நாட்டை பார்பேன் என்று கூறுகிறார் உடனே நகைச்சுவையும், மனைவியிடம் இருந்து அடியும் வாங்கி ஓடுகிறார் கணவர்.