காதலென்னும் சோலையினில்38

கவிதாவும், ராஜசேகரனும் ஒன்றாக சேர்ந்து விட்டதால் அம்மா தங்கை அனைவருக்குமே மகிழ்ச்சிதான். கவிதாவின் ஊருக்கு செல்ல அனைவரும் தயாரானார்கள்.........


அப்பொழுது கவிதா தன் தந்தைக்கு அழைப்பு விடுத்து நடந்ததையெல்லாம் சுருக்கமாக சொல்லிவிட்டு தாங்கள் அனைவரும் வருகிறோம் என்ற செய்தியை தெரிவித்தாள் அவருக்கும் எல்லையில்லா மகிழ்ச்சி, சரி வாங்க நான் எல்லாம் ரெடி பண்றேன்,

ரெயிலில் வருகிறீர்களா? இல்லை பஸில்லா? என்று கேட்க! அவரிடம் கேட்டு சொல்கிறேன் என்று இணைப்பைத்துண்டித்தால்...............


நேரே ராஜாவிடம் சென்று கேட்டாள்! அப்பொழுது ராஜலெக்ஷ்மி ரயில் தான் வசதியா இருக்கும் ரயிலில் போகலாம் என்று சொல்லவே, ராஜாவும் தலை அசைத்தான்...........


மறுபடியும் தந்தைக்கு தகவலை சொல்லிவிட்டு பெரிய குடும்பம் அப்பா பார்த்து என்று அவருக்கு புரியும் படி நாசுக்காக கூறினாள்...............


தந்தையும் புரிந்து கொண்டு சரி என்று சொல்லிவிட்டு தானே ரயில் நிலையம் வந்து அழைத்து செல்வதாக சொல்லிவிட்டு அழைப்பைத்துண்டித்தார்...........


தன் மனைவியிடம் மகளும் குடும்பத்தாரும் வருவதைப்பற்றியும், நல்ல படியாக கவனிக்க வேண்டுமென்றும் சொல்லி ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்தார்கள்..............


கவிதா அத்தைக்கும், ராஜலெக்ஷ்மிக்கும் வேண்டிய உதவிகளை செய்துகொண்டிருந்தாள்.............


ராஜலெக்ஷ்மி குட்டிராஜாவை கவனித்துக்கொண்டிருந்தாள்...........


ராஜாவை கவிதா தனியாக அழைத்து உங்களிடம் ஒரு விஷயம் பேசவேண்டும் என்றாள்!

என்ன? என்று ராஜா கேட்க! தன் மனதில் பட்டதை அவனிடம் சொன்னாள்,,,,,,,,,,,,,,,,,,


என் தம்பி ஒருத்தன் "DSP" யா இருக்கான் அவன் ரொம்ப அழகாகவும் ராஜலெக்ஷ்மிக்கு பொருத்தமாகவும் இருப்பான், ரொம்ப வசதியும் படைத்தவன் அவனை ராஜலெக்ஷ்மிக்கு பேசி முடிக்கலாமா? என்று கொஞ்சம் தயக்கத்துடன் கேட்டாள்...........


உனக்குத்தான் தம்பி இல்லையே! என ராஜா கேட்டான்?

இது என் சித்தப்பா பையன். நம் விஷயம் எதுவும் அவனுக்குத்தெரியாது இனிதான் போய் பேசணும் என்று சொன்னாள்.....


சரி அங்கு சென்ற பிறகு முடிவு பண்ணலாம். என்று சொல்லிவிட்டு இருவரும் அங்கிருந்து அம்மாவிடம் சென்றார்கள்...........


அம்மாவிடம் இப்போது சொல்லவேண்டாம் அங்கு சென்ற பிறகு பேசலாம் என்று சைகையால் புரியவைத்தாள் கவிதா...........


ம்......... என்று தலையசைத்தவன், எல்லாரும் ரெடி ஆகிவிட்டீர்களா?
கிளம்பலாம் என்று சொல்லிவிட்டு குட்டிராஜாவை கையில் தூக்கினான்.........


கவிதா,அம்மா,ராஜலெக்ஷ்மி அனைவரும் தனக்கு வேண்டிய உடைமைகளையும், பொருட்களையும் எடுத்து விட்டு வெளியே வந்தனர் ................


இங்கு நடக்கும் நிகழ்ச்சிகளை நோட்டமிட்டுக்கொண்டிருக்கும் அந்த மர்ம அசாமி இவர்கள் எங்கோ கிளம்புகிறார்கள் என்பதை அறிந்ததும் மறு படியும் பூத் பக்கம் சென்றவன் அழைப்பைக்கொடுத்தான், விபரத்தை சொன்னான்................


எங்கு நோக்கி செல்கிறார்கள் என்று சீக்கிரம் பார்த்து தகவல் அளி என்று பதிலளித்து விட்டு மறுமுனையில் பேசியவர் இனைப்பைத்துண்டிக்க,,,,,,,,,,,,,,

கார் டிரைவரிடம் ராஜா சொன்னதை வைத்து இவர்கள் செல்வது ரயில் நிலையம்தான் என்று புரிந்து கொண்டு அவனுக்கு அழைப்பு கொடுத்தான் அந்த...........மர்ப நபர்.........



தொடரும்.......

எழுதியவர் : (13-Jan-14, 1:02 pm)
பார்வை : 241

மேலே