கைகளின் கதை கேட்டிரோ
தாலாட்டு பாடி
தோளிலே சாய்த்து
கைகளால் ராராட்டி
அணைத்தேன் என் செல்வத்தை
முதற் படியாக.
என் கையைப் பிடித்து
தத்தி தத்தி
விழுந்து எழுந்து
நடக்கப் பழகினான்
இரண்டாம் நிலையாக
அவன் கையைப் பிடித்து
எழுதினேன் மெதுவாக
பெரிதும் சிறிதுமாக
கிறுக்கி பின் எழுதினான்
மூன்றாம் படி வமாக.
என் கையால் அவனைப்
பேணி வளர் த்து
ழுமுமையாக்கினேன்
ஆனான் பெரிய மனிதனாக
நான்காம் நிலையாக
வளம் தேடி பறக்க
நினைத்தான் என் மகன்
என் கையை விட்டான்
நானும் அகன்றேன்
கடைசி தடவையாக.
நோக்கினேன் என் கைகளை
திடமான் மிருதுவான் கைகள்
இன்று சுருங்கி , தேய்ந்து .
நடுக்கும் நிலை கண்டு
அழுதேன் பின் சிரித்தேன்.
கைகளின் கதை கேட்டிரோ
காலம் காலமாக நடப்பவையே
கைகள் சொன்ன விதம் புதுமை
முந்தியவர்களும் இன்றுள்ளவர்களும்
வருங்காலத்தவ்ரும் சொல்வது அதுவே.