ராஜாவும் இருச்சக்கரமும்

ராஜா தன் வேலையை முடித்து கொண்டு தன் இருசக்கர வண்டியில் வீட்டிற்க்கு கிளம்பினான். ஆழ்வார்பேட்டையில் தன் அலுவலகத்தில் கிளம்பி கோட்டூர் வழியாக வேளச்சேரியில் இருக்கும் தன்வீடிற்கு சென்று கொண்டு இருந்தான் வழியின் பாதியில் அவன் இருசக்கரம் முக்கி நின்றது. வண்டி நின்ற இடம் ராஜீவ் காந்தி சாலை, மத்திய கைலாஷ் சிக்னல் அருகில் மணி சரியாக இரவு 12.15am. என்ன செய்வது என்று தெரியாமல் சில தூரம் தன் இருச்சக்கரத்தை தள்ளினான் களைத்து போன ராஜா டைடல் பார்க் அருகில் வண்டியை சோக் போட்டு ஸ்டார்ட் செய்து பார்த்தான் ஆனால் ஒன்றும் வேலைக்கு ஆகவில்லை. அவன் ஸ்டார்ட் செய்து கொண்டு இருக்கையில் அந்த வழியாக சென்ற நபர் ஒருவர் ராஜாவை பார்த்து என்ன சார் ஏதும் பிரச்சனையா என்று கேட்டார். ராஜாவோ ஆமா சார் வண்டியில் பெட்ரோல் காலியாகி விட்டது என்று சொல்ல. எங்க சார் போகணும் என்று அந்த ஆசாமி கேட்க. அச்செண்டாஸ் வழியாக வீட்டிற்க்குபோகணும் சார் என்னை அச்செண்டசில் விட்டுரின்களா என்று சொன்னான் ராஜா அதற்க்கு அந்த ஆசாமி நான் வேணும்னா srp பக்கத்தில் இருக்கும் பெட்ரோல் பங்கில் விட்டுரேனே என்று யோசனை சொல்ல சரி என்று அந்த ஆசாமி டோக் பண்ணி கொண்டு ராஜாவை கூட்டி சென்றார் டோக் செய்து கொண்டு ஒரு வழியாக பெட்ரோல் பங்கை அடைந்தனர் ஆனால் அங்கு ஒரு அதிர்ச்சி பெட்ரோல் பங்கில் உள்ள எல்லா விளக்குகளும் அணைக்கப்பட்டு இருந்தது .வேறு பெட்ரோல் பங்கோ மிக தூரமாக உள்ளது என்று சொன்னார் அந்த ஆசாமி சரி என்று நான் பொய் கேட்டு பார்கிறேன் என்று எதிர் ரோட்டில் கிராஸ் பண்ணி பெட்ரோல் பங்கின் உள்ள அலுவலக அறைக்கு சென்றான் ராஜா. அலுவலகத்தினுள் ஒரு வாலிபரும் ஒரு வயதான தாத்தாவும் உட்கார்ந்து பணத்தை எண்ணி கொண்டு இருந்தனர். ராஜா அந்த வாலிபரை பார்த்து ஜி வண்டியில பெட்ரோல் காலி ஆகிருச்சு இந்த பாட்டிலே பெட்ரோல் தர முடியுமா என்று கேட்டான். அதற்க்கு இல்லை என்ற தலையை ஆடிக்கொண்டே சொன்னான் அந்த வாலிபன். ஜி கொஞ்சம் உதவி செய்ங்க பக்கத்துல வேற எந்த பெட்ரோல் பங்கும் இல்ல என்று கெஞ்சினான் ராஜா.அதற்கு அந்த வாலிபர் முடியவே முடியாது கெளம்பு காத்து வரட்டும் என்று சொல்லிட்டான். கவலை முகத்துடன் வெளியே வந்து உதவி செய்த அந்த நபரிடம் நடந்ததை சொன்னான் ராஜா என்னடா பண்ணுறது என்று யோசித்து கொண்டே சார் நீங்க என்ன srpலயே ட்ரோப் பண்ணிருங்க நான் அங்க இருந்து தள்ளிகிட்டே போயிறேன் என்றான் ராஜா அந்த நபருக்கும் மணியாகிவிட்டது போல. சரி திருப்புங்க என்று இருவரும் வண்டியை திருப்பி ராங் ரூட்டில் சென்றார்கள் srp சிக்னல் அருகில் ஒரு முனையில் இருந்து மறுமுனைக்கு கிராஸ் பண்ணிய ராஜா சார் நான் இங்கு இருந்து அப்பிடியே தள்ளிகிட்டே போறேன். உங்களுக்கு டைம் ஆகும் நீங்க போங்க சார் என்றான்.சரி என்று அவரும் விடை பெற்றார்.
அவருக்கு குட் பாய் சொல்லி srpயில் இருந்து வண்டியை தள்ள ஆரம்பித்தான் ராஜா. srpயில் இருந்து வேளச்சேரி செல்லும் ரோடு கருகும்முன்னு இருக்கும் புதிதாக ரோடுகள் அமைக்கப்பட்டு இருப்பதால் மின் விளக்குகள் இருக்காது. மணி சரியாக 12:40 இருக்கும் மிகவும் சோர்வுற்று வண்டியை தள்ளி கொண்டே வந்தான் ராஜா. வழியில் இருந்த நாய்கள் ஏதோ பேஎய் பார்த்தது போல் கத்தி குறைத்து கொண்டு அவனை துரத்த ஆரம்பித்தது ரோடு முழுக்க நாய்களின் ஆராஜகம். சில நாய்கள் வெறி கொண்டு கத்த ஆரம்பித்தன, கீழ இருந்த கள்ளை எடுத்து நாய்களை விரட்டிய படியே தன் இருச்சக்கரத்தை தள்ளினான் ராஜா. பத்து நிமிடத்தில் அமெரிக்கன் ஸ்கூல் அடைந்தான். நாய்களை விரட்டி விட்டு தள்ளி சென்று கொண்டு இருந்த ராஜாவுக்கு அடுத்து ஒரு அதிர்ச்சி. அமெரிக்கன் ஸ்கூல் அருகே நின்று இருந்த மூன்று காவல் ஆய்வாளர்கள். அவனை வலி மறைத்தனர். எங்கு இருந்து வரிங்க சார் என்று நார்மலாக கேட்ட காவல் அதிகாரி திடீரென்று ராஜாவை ஒரு குற்றவாளியை போல கேள்வி கேட்க ஆரம்பித்தார். உன் id கார்டை காட்டு உன் அப்பன் பெயர் என்ன, எங்கு செல்கிறாய் என்று அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டார் அந்த காவல் துறை நண்பர். ராஜாவோ காவல் துறை கேட்ட எல்லா விசாரணை கேள்விகளுக்கும் பதில் சொல்லிவிட்டு. உடல் சோர்வுடன் மன உளைச்சலையும் பெற்று கொண்டான். காவல் துறை உங்கள் நண்பன் என்று கூறுவார்கள் ஆனால் அந்த நண்பனோ ராஜாவுக்கு பெரிய மன உளைச்சலை உண்டாக்கி விட்டான். மனதை தைரியப்படுத்தி கொண்டு அங்கு இருந்து நகர ஆரம்பித்தான். அவனுக்கு சற்று முன்பு உதவி செய்த நண்பரோ, தன் உற்ற நண்பனை போல தேடி வந்து உதவி செய்தார். காவல் துறை உங்கள் நண்பன் என்று சொல்ல கூடியவர்களோ ஒரு குறுகிய மனதுடன் நடத்தினர். என்ன செய்வது ஒரு கையில் இருக்கும் விரல்கள் எல்லாம் சமமாக இருபதில்லையே என்று நினைத்து கொண்டு ராஜா தன் இருச்சக்கரத்தை தட்டி தடுமாறி தள்ளி தன் வீடு வந்து அடைத்தான். மெட்ரோ சிட்டி என்று சொல்லகூடிய சென்னையில் ஒரு மனிதன் பிழைப்பதற்கு எவ்வளவு இன்னல்களை அனுபவிக்க வேண்டி உள்ளது. எத்துனை துன்பங்களும் இன்னல்களும் வந்தாலும் அத்துனையய்யும் தவிடு பொடியாக்கி தன் இலக்கை நோக்கி நகர்கிறான் ராஜா.

எழுதியவர் : முஹம்மது ரபிக் (13-Jan-14, 9:02 pm)
பார்வை : 183

மேலே