பொங்கலோ பொங்கல்

யான கட்டி போரடிச்ச காலமது -- இன்னிக்கு
யான வில விற்குது அரிசியெல்லாம் -- ஆனாலும்
விதச்சவ வயிறும் மனசும் நிறையல! -- அப்புறம் என்ன
பொங்கலோ பொங்கல்...!

யான கூட வருஷம் ஒருமுற
அரசாங்க செலுவுல புத்துணர்ச்சி அடையுது -- ஆனா
உழுதவ மனசு களைக்குது! -- அப்புறம் என்ன
பொங்கலோ பொங்கல்...!

வெள்ள கோட்டும் கருப்பு நோட்டும்
ஆத்துத் தண்ணிய வித்து காசாக்குது! -- ஆனா
பாசனத்துக்கு தண்ணிய கேட்டா
கோர்ட்டுல கேஸூ நடக்குது! -- அப்புறம் என்ன
பொங்கலோ பொங்கல்...!

கடலோர அழகு மரம் வளர்க்க அங்கே
நூறு கோடி ஒதுக்குது -- ஆனா
விளை நிலத்துல பயிறு வளர்க்க
சில கோடி ஒதுக்க தயங்குது! -- அப்புறம் என்ன
பொங்கலோ பொங்கல்...!

மது விற்பவங்கூட அரசாங்க
ஊழியனாகிறான் -- ஆனா இங்க
விதைத்து அறுப்பவன்
அநாதையாகிப் போகிறான் -- அப்புறம் என்ன
பொங்கலோ பொங்கல்...!

உழவரையெல்லாம் அரசாங்க ஊழியனாக்கி விடு
அறுவடைக்கேற்ப அங்கீகாரத்தை அள்ளிக் கொடு -- செய்தால்
உணவும் உயரும் உழவும் உயரும்
அதை உலகமும் உணரும் -- அப்புறந்தாங்க இது
பொங்கலோ பொங்கல்...!

எழுதியவர் : அலெக்சாண்டர் (14-Jan-14, 2:00 am)
Tanglish : pongalo pongal
பார்வை : 88

மேலே