கள்ளக்குறிச்சியின் கண்ணீர் துளிகள்

*கள்ளக்குறிச்சி எரிச்சாராய சாம்பல்*

*குறிப்பு;* எந்தக் கரை போட்ட கட்சி துண்டும் வேட்டியும் எனக்கு சொந்தமில்லை....



🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

*கள்ளக்குறிச்சி*

படைப்பு *கவிதை ரசிகன்*
குமரேசன்

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

'கள்ள'க்குறிச்சி என்பதால்
'கள்ள'ச்சாராயம்
காய்ச்சப்படுகிறதா ?
'கள்ள'ச்சாராயம்
காய்ச்சப்படுவதால்
'கள்ள'க்குறிச்சி என்று
அழைக்கப்பட்டதா?

எல்லா அரசும்
'படி'க்க வைத்த
அழகு பார்க்கும்....
எங்கள் அரசு தான்
'குடி'க்க வைத்து
அழகு பார்க்கிறது....

குடித்து குடித்து செத்தால்
அது நல்லச்சாராயம்
குடித்தவுடன் செத்தால்
அது கள்ளச்சாராயம்....
குடித்தவுடன் செத்தால் தான்
அது உயிரா ?
குடித்து குடித்து செத்தால்
அது என்ன மயிரா?

எரிச்சராயத்தால்
எரிந்தவனுக்கு
கொடுக்கும் பணம்
பரிதவிப்போரைக் காப்பாற்றவா? பதவியைக் காப்பாற்றவா ?

மக்களைக் கொன்றுவிட்டு
கொடுக்கும் பணத்திற்கு
பெயர் என்ன ?
அனுதாப இழப்பீடா ?
நாகரிமான லஞ்சமா ?

ஓ....! புதிய சட்டம்.....
யார் யாரை வேண்டுமானாலும்
கொன்று கொள்ளலாம்
பத்து லட்சம் கொடுத்தால் போதும்...

' பாடி 'பொற்கிழி பெற்றது
சங்கக்காலம்
' பாடி ' பணம் பெறுவது
எங்கக்காலம்.....

பத்து லட்சம் எதற்கு தெரியுமா?
இவர்களும்
நாட்டுக்காக தான்
உயிர் தியாகம் செய்தார்கள்....
ஆம்.....!
சர்க்கார்
சாராய விற்பனையில் அல்லவா
தள்ளாடாமல் நடக்கிறது......?

இவர்கள் கொடுக்கும்
பத்து லட்சம்
பிள்ளைகளுக்கு
அப்பனாக இருக்குமா ?
மனைவிக்கு
புருஷனாக நடக்குமா ?

பத்து லட்சம்
வருடத்திற்கு எத்தனை
குட்டி போடும் ?
அதை வளர்த்து விற்று
சாகும் வரைக்கும்
சாப்பிட முடியுமா ?

இழந்தப் பிறகு
'இழப்பீடு' கொடுப்பதல்ல அரசு
இழக்காமல் இருக்க
'பாதுகாப்பு' கொடுப்பதே அரசு...!

இந்த பத்து லட்சம்
இந்தப் பருவத்திற்கான
'உயிரின் விலை' தான்....
அடுத்த பருவத்திற்கு
'எவ்வளவு
ஏற்ற போகிறார்களோ....?'

"குடிகாரனா பார்த்து
குடியை விடாவிட்டால்
குடியரசால்
என்ன செய்ய முடியும்" என்றால்...
"கள்" இறக்குவதை
தடை செய்ய
உனக்கென்ன தகுதி இருக்கிறது..?

'கள்'ளைத் தடை செய்வது
'குடிமக்களை' காப்பாற்றவா ?
'உன் மக்களை' முன்னேற்றவா ?

நல்லச் செடிகள்
எத்தனையோ இருக்கிறது
கள்ளிச்செடிகளிடம்
நாட்டைக் கொடுத்தால்....
நாட்டு மக்களுக்கு
அது என்ன தரும்
"கள்ளிப்பாலைத்" தவிர...?

'சட்டம்
தன் கடமையைச் செய்யும் '
அதற்கு
இங்கு "நான்கு பேர்"
சாக வேண்டும்
ஒன்றுக்கல்ல
ஒவ்வொன்றுக்கும்....

ஆட்சிக்கு வரும் வரை
"மதுவிலக்கு
அமல்படுத்தப்படும்" என்று
தேர்தல் வாக்குறுதி
கொடுக்க தெரிந்தவர்களுக்கு.... ஆட்சிக்கு வந்த பிறகு
அதை நிறைவேற்றிக்
கொடுக்க தெரியாமல்
போவதுதான் ஏனோ....?

இனியும்
அமைதியாக இருந்தால்
எரிக்கப்போவது
எரிச்சாராயம் மட்டுமல்ல
'எதுவாகவும்' கூட இருக்கலாம்....!!!

*கவிதை ரசிகன்*

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

எழுதியவர் : கவிதை ரசிகன் (23-Jun-24, 7:04 pm)
பார்வை : 70

மேலே