சிறு வருத்தம்
பரிதி தன்முகம் காட்டுமுன்
பள்ளியெழுந்து
பக்தர்களுக்கு அருள்பாலிக்கும்
பரந்தாமனுக்கும் ....
பிறந்த வேகத்தில் மார்கழியும்
பிரிந்து சென்றதில் வருத்தமாம் ....!!
வாசலில் விரலுளியால் செதுக்கி
வண்ணங்களால் அலங்கரித்த
வனிதையரின் கோலவிரல்கள்
வரும்நாளில் தன்மேல் பட
வருடம் ஒன்றாகும் என்பதில்
விடைபெற்ற மார்கழியை நினைத்து
வீதிகளுக்கும் சிறுவருத்தமாம் ....!!