உனக்காகவே அல்லாமல்

என் கனவுகள்
யாருக்கப் புஷ்பிக்கின்றன
என் இஷ்ட தேவதையே
உனக்காக இல்லாமல்

இந்தப் பாசப் புனலூற்று
யாருக்காகப் பொங்கி வழிகிறது
என் இதயத்தின் குறிஞ்சி மலரே
உனக்காக அல்லாமல்

மேக மண்டலத்தின் வான வீதியில்
என் நினைவுகள் எதற்காக உலா வருகின்றன
என் கண்மணியே
உன் காவிய நெஞ்சத்திற்கே அல்லாமல்

நான் வளர்க்கும் ரோஜா செடிகளெல்லாம்
என் தங்கத் தாரகையே
நீ சூடிக்கொள்வதற்கே அல்லாமல்
வேறு எதற்காக ?

எழுதியவர் : (16-Jan-14, 8:02 pm)
Tanglish : unakaakave allaamal
பார்வை : 67

மேலே