அவளிடம் இருந்து பாடம் படிக்க வேண்டும்

வித்தை காட்டும் குழந்தை
வேடிக்கைப் பார்த்தது ஏக்கமாக....
பள்ளிச் சீருடையோடு
படிக்கச் செல்லும் குழந்தைகளை...

அதற்குள் அப்பா அவர்மீது
அடித்துக் கொண்ட சாட்டையடி...
அவளை அவசரமாக
குட்டிக் கரணம் போட வைத்தது.....

பாவம் - அப்பாவுக்கு வலிக்கும்....!!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (17-Jan-14, 5:14 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 71

மேலே