ஒற்றுமையாக இருப்போம் பொங்கல் கவிதை போட்டி

பாரதம் நம் நாடு
தமிழகம் நம் வீடு
தமிழ் அன்னை பெற்றெடுத்த
12 கோடி பிள்ளைகாளாய் நாம்
அன்னையின் தமிழ் மொழியே
நம் உயிர் மொழி

முன் பின் தெரியா ஒருவரிடம்
முகம் பார்த்து பேசிடும் போது
முகம் சுளிக்காமல் பேசிடும் மொழி
நம் தாய் மொழியாம் நம் தமிழ் மொழி

தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற பழமொழியால்
தமிழரின் பண்டிகையை கொண்டாடி
ஒருவருக்கொருவர் அன்புடன் வாழ்ந்தும்
வீர விளையாடில் நம் வீரத்தை விதைத்தும்
இருப்பதை இல்லாதவர்களும் கொடுத்தும்
வாழ்ந்து வந்தோம்

செம்மறி ஆட்டு கூட்டதில் புகுந்த
செந்நரிகள் கூட்டம் போல்
சாதி மத இன வெறியர்கள் நுழைத்தது யாரோ

ஒற்றுமையாக இருந்த குடும்பத்தை
அங்கும் இங்குமாய் சிதைநத்தது யாரோ

இமயம் வரை பறந்து கிடந்த
நம் இனம் இன்று இருக்க இடம்
இல்லாமல் தவிக்கின்றனர்

இடம் மாறி போனவர்களும்
வாழ முடியாமல் துடிகின்றனர்

மனிதனும் மிருகமாய் மாறியதால்
யார் எக்கணம் எங்கிருந்து அடிப்பார்கள்
என்று தெரியாமல் துடிக்கின்றனர்

பசிக்கு கொடுக்க யாரும் இல்லை
பகைக்கு அடிக்க கூட்டம் இருக்கின்றனர்

குணத்தை மதிக்க யாரும் இல்லை
பணத்தை மதிக்க கூட்டம் இருக்கின்றனர்

துன்பத்தில் ஆறுதல் சொல்ல யாரும் இல்லை
நம் துன்பத்தில் இன்பம் காண இருக்கிறனர்

போதும் தோழா விழுந்து கிடந்தது
மீண்டும் நாம் எழுவோம்
பிரிந்து கிடக்கும் குடுப்பதை இணைத்து
மீண்டும் ஒற்றுமையாக வாழ
முயற்சி செய்யோம்

எழுதியவர் : சு.சங்கத்தமிழன் (17-Jan-14, 4:11 pm)
சேர்த்தது : சு சங்கத்தமிழன்
பார்வை : 339

மேலே