விழித்துக் கொல்

தூக்கத்திற்கும் விழிப்புக்கும்
இடையில் இருப்பது
உன் கனவென்றால்...
மயக்கத்தையே பரிசளிப்பது
உன் நனவு...

வாய் நிறைய புன்னகை
வேண்டாம்...
மனம் நிறைய மகிழ்ச்சியை வாரி இறைக்கிறது
உன் அருகாமை...

முத்தங்கள் மட்டும் இல்லை என்றால்
பாலை வன யுத்தங்கள் மட்டுமே
காதலி வரலாறாய் இருக்கும்...

காதலை தைரியமாய்
சொல்லி விட்டேன்...
காமத்தை எந்த மொழியில் சொல்வது...

தவற விட்ட கணங்கள் என்று
என்னை நானும் உன்னை நீயும்
பழித்துக்கொண்டிருக்கிறேன்.

அதற்கு பழிக்கு பழி வாங்கவே
நம்மை பற்றிய பிரமிப்புகள்
அகலும் முன்பாகவே
நம் திருமணத்திற்கு பிறகு
நம்மிடம் இருந்து
துண்டித்துக்கொள்கிறது
காதல்!

எழுதியவர் : இளந்தென்றல் (17-Jan-14, 4:20 pm)
பார்வை : 133

மேலே