காத்திருக்கிறேன் - கண்ணீரோடு
கண்ணீர் நிறைந்த கடைசி சந்திப்பு – மீண்டும்
காணத் துடிக்கும் என் இதயத் துடிப்பு …-பல
காயங்களைத் துடைத்த உன் அழகான சிரிப்பு – என்றும்
காலையில் மறுக்கும் என் கண்ணுக்குள் புகுந்த உன் நினைப்பு ……
உன்னுடைய இந்த மௌனம் எதற்கு என்று புரியவில்லை ;
உனக்காக இன்னும் வேற என்ன செய்வது என்று தெரியவில்லை ….
உன்னிடம் இருந்து கிடைத்த பாசம் சிதையவில்லை ;
உன்னோடு வாழ நினைத்த கனவுகளும் இன்னும் கலையவில்லை …
உன் மௌனத்தை சிதைத்து நம்பிக்கையோடு வா…..
உனக்காக காத்திருக்கிறேன் …
உன் ஆசைகளை பூர்த்தி செய்யக் காத்திருக்கிறேன் …
உனக்காக மட்டும் காத்திருக்கிறேன் …….!!!!
( தோழமையின் தமிழாக்கம் )