தை பூசத்திருநாள் அ முதல் ஒள வரை முருகன் தான்

தை பூசத்திருநாள் இன்று !
முருக பெருமானின் அருள்
அனைவருக்கும் கிட்டட்டும் !!
அமைதி கொடுப்பவர் முருகன் தான் !
ஆற்றல் கொடுப்பவர் முருகன் தான் !
இன்பம் அருள்பவர் முருகன் தான் !
ஈசனுக்கு ஈசன் முருகன் தான் !
உறவு கொடுப்பவர் முருகன் தான் !
ஊக்கம் தருபவர் முருகன் தான் !
எதையும் வெல்பவர் முருகன் தான் !
ஏற்றம் அருள்பவர் முருகன் தான் !
ஐயம் நீக்குபவர் முருகன் தான் !
ஒப்பில்லாதவர் முருகன் தான் !
ஓதற்கு அரியவர் முருகன் தான் !
ஒள கார புத்திரன் முருகன் தான் !

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (17-Jan-14, 3:56 pm)
பார்வை : 76

மேலே