கட்டாயம் வரவேண்டும் வருவாயா

மழையே உனக்கென்ன கோபமோ ?
மறந்துவிட்டாயா எங்களை ஏன்
மாதம்மும்மாரி பெய்ய மறுக்கிறாய்

புரிகிறது உன்னாதங்கம் நியாயம்தான்
உன்னருமை தெரியாது உன்மக்கள்
உன்பிள்ளைகளை கொன்று குவிக்கின்றனர் .

உன்வரவிற்கு மட்டுமே காத்திருந்தவர்கள்
ஏமாற்றத்தில் இறந்து விட்டார்கள்
உன்னிடம் வந்து சேர்வதற்கு ..

பாவம் அவர்கள் பிள்ளைகளின்
பசிபோக்க வழி தெரியாமல்
வந்து விட்டார்கள் வந்தவர்களை

ஏற்றுகொண்டாய் அல்லவா இனியும்
பொய்க்காது எங்களின் பொய்வாழ்வு
துலங்க தூரலாய் வராமல்

அடைமழையாய் வந்து ஆற்றை
நிரப்பி கிணறு வழிந்தோடி
வாய்க்கால் வரப்பில் துள்ளித்

திரியும் மீன்குஞ்சுக்கு உயிர்கொடுத்து
தலைபிரட்டையை தாலாட்டி
கருகிப்போன பூமிப் பந்தை

மீண்டும் பசுமையாக்க வருவாயா
கோபத்தை தணித்துக் கொண்டு
வந்துவிடு இனி வருடத்திற்கு

ஈரைந்து மரத்தை வைத்து
நான் வளர்க்கிறேன் வருந்தாதே
கட்டாயம் வரவேண்டும் வருவாயா ?

எழுதியவர் : ப்ரியாராம் (17-Jan-14, 3:56 pm)
பார்வை : 179

மேலே