அக்காவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

பரபாவ வருடம்
தை திங்கள் ஏழாம் நாள்
பிரமன் தீட்டினான்
உமா என்றொரு
உயிர் ஓவியத்தை ..!!!

புரிந்து பேசுவதில் தோழி
அறிவை புகுட்டும் ஆசான்
அன்பு கொள்வதில் அன்னை

கொஞ்சும் மொழி பேசி
நெஞ்சை குளிர வைக்கும்
குழந்தை குணமவளுக்கு..!!!

என் சகோதரியவளுக்கு
இன்று பிறந்த நாளாம்..!!!!

கவியெழுதி வாழ்த்திட
கம்பனை அழைத்தேன்
கம்பனோ
கற்பனையில் சிக்காத
கவிதையவள் என்றான்..!!!!

பூத்தூவி வாழ்த்திட
பூப் பறித்தேன்
பூக்களோ
புன்னகை பூ பூக்கும்
பூங்காவனமவள் என்றது..!!!

முத்துமாலை தொடுத்து வாழ்த்திட
முத்தெடுக்க போனேன்
முத்தோ
முழுமதி நிறத்தழகி
முத்து பல்லழகியவள் என்றது..!!!

தெம்மாங்கு பாடி வாழ்த்திட
தென்றலை கூப்பிட்டேன்
தென்றலோ
தேமதுரக் கவிப் பாடும்
தேன்தமிழின் புதல்வியவள் என்றது..!!!

புன்சிரிப்பு மாறாமல்
புது வேகம் குறையாமல்
புதுப்பாதை நிறைவோடு
பல்லாண்டு வாழ்ந்திருக்க
வாழ்த்த வயதில்லை
என்ற போதும் வணங்கி வாழ்த்துகிறேன்..!!!

ஜனவரி 20 அன்று பிறந்தநாள் காணும்
உமா அக்காவிற்கு எனது
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..!!!

எழுதியவர் : சுதா (17-Jan-14, 8:01 pm)
சேர்த்தது : சுதா (தேர்வு செய்தவர்கள்)
பார்வை : 29162

மேலே