அ ம் மா எனும் ஓசை
அம்மா. . .
ஓர் ஓசையில்
இத்தனை அர்த்தங்களா. . .
அம்மா. . .
குழந்தையின் மழலையில்
குழல் தரும் ஓசை . .
அம்மா. . .
பால் தரும் பசுவும்
பகிர்ந்திடும் ஓசை . . .
அம்மா. . .
பசித்திடும் ஏழையின்
பாவ மொழி ஓசை. . . .
அம்மா. . .
அடிக்கையில் அனைவரும்
அலறிடும் ஓசை. . . .
அம்மா. . .
பருவத்தின் ஸ்பரிசத்தில்
பரவசத்தின் வார்த்தை. . .
அம்மா. . .
முதுமையின் வலியிலும்
முனகிடும் வார்த்தை. . .
அம்மா. . .
சொன்னாலும் முடியாது
சொல்லாமல் தீராது. . .
அம்மா. . .
இருக்குதோ தமிழில்
இதை விட சிறந்த வார்த்தை. . .
அம்மா. . .
ஆதலால் அதுதானே
அழகு தமிழ் முதல் ஓசை. . . ! ! !