கா த்திருப்பின் கால்கள்

கா........த்திருப்பின் நீண்......ட கால்களினூடே ..

உருவப்பட்ட ஊசியிலைக்குச்சியின்

தனித்த தூளியில் ,,

உயிர்ச் சூட்டின் கதகதப்புக் கோரி ,

உடைந்திடும் வினாடிஊசலில் ,,

அநாதையான அலாதி முட்டை ....



அறிந்திராது !!!



ஆரண்ய மயான மேட்டில் பஞ்செனப் பறக்கும்

தாய்க்குருவியின் தசைச் சுமந்தச் சிறகுகளை ..



வராத வரவுக்கு விக்கித்து வாயிப்பிளக்கும்...

இனி முளைக்கும் அந்த



(ச)/(க) வலைக்குஞ்சு...

எழுதியவர் : இந்து (17-Jan-14, 9:44 pm)
பார்வை : 71

மேலே