மவுனத்தின் அகராதி -- மணியன்

புரியாத மொழி என்று
ஏதும் உண்டோ இதற்கு மட்டும். . .

உலகின் அத்துனை மொழியும்
பேசும் வளம்
மவுனம் மட்டுமே. . .

கண்கள் மட்டும் தான்
மவுனத்தின் கை பேசி. . .

நித்திரையில் வந்தும்
நம் நினைவுகளை உரசிச் செல்லும். . .

ஐந்து நிமிடம் வந்திட்டாலும் நம்மை
அரியணையில் அமர்த்திப் போகும். . .

அரசியலில் பல நேரம்
அத்தியாவசியத் தேவை ஆகும். . .

ஒரே ஒரு மொழிதான் இது
ஓராயிரம் அர்த்தம் சொல்லும். . .

அர்த்தம் தேடி புரிந்து கொள்ள
அகராதி இதற்கு ஏது. . .

மவுனத்துடன் ஒப்பிட்டால்
மவுனமே மவுனமாகும். . . .

எழுதியவர் : மல்லி மணியன் (17-Jan-14, 11:29 pm)
பார்வை : 302

மேலே