உயிரற்ற திரை

உண்மையற்ற
வாழ்வை உயர்வாக
காண்பிக்கும்
உயிர் அற்ற
நிஜத்தை பார்த்து
உள்ளங்கள்
ஒன்று கூடி மகிழ்கிறது
நாகரீக
வளர்சிகள் கலாச்சார
சீர்கேடுகளாக
அரங்கேற்றமும்
செய்கிறது
வேடிக்கைகளின்
பரிமாற்றம் விலை அற்ற
சந்தோசங்கலாக
காட்சியும் அழிக்கிறது
பொழுதுபோக்குகள்
போக்கற்றது
என யாரும்
நினைப்பதில்லையே..!!
திரை சுவடுகள்
வெறும்
காகிதம் என
உணர்வதில்லையே..!!
ஏமாற்றும்
உலகம் திரைக்கு
பின்னால்
சிரிக்கும்
காலம் இதுதானோ..!
சுகம் அற்ற
உன் சுயம்வரத்தை
பார்த்து
பயனடைந்தவர்கள்
யார்...!
நிஜமற்ற உன்
திரையை
பார்த்து
பயனடைந்தவர்கள்
யார்..!