அக்கரைப் பச்சை
வறுமை நிலை கண்டு நான் பயந்தேன் - அதைப்
போக்க பல வழியில் துணிந்தேன்
அக்கரை பச்சையெனப் புரிந்தேன் - அதை
செயலாக்க மனைவி நகை இழந்தேன்
மனைவி ,பிள்ளைச் செல்வங்ளைப் பிரிந்தேன்
புதிய ஒரு சூழலிலே இணைந்தேன்
மொழியறியா மழலை போலானேன் - அவர்
பேசும் முகம் பார்த்துப் பொருளறிந்தேன்
தொலைபேசி மணி மதுர கீதமாகின
தாரமொழி அமுத மொழியாகின
பிள்ளை முகம் காண மனமேங்கின
நண்பர் உறவு நினைவாகின
புகுந்த நாடு மா நாடாகினும்
என் நாடு என்றும் மேலோங்கின
அவர் மொழி பழகிப் போகின
என் தமிழ் கேட்க செவிகலேங்கின
சில வேளை என்தாரம் சமைத்துட்ட உணவு
சுவைக்கவில்லை - அவ்வுணவு
ஆகா! என்ன சுவை! என்ன சுவை ! புரிந்திட்டேன் இப்போது!