சரியா தவறா காதல்
சரியா தவறா காதல்
பொய்யா மெய்யா காதல்
சுகமா சுமையா காதல்
மனம பணமா காதல்
சிரிக்கின்ற மழலை காதல்
உயிரின் துடிப்பு காதல்
விழிகளின் வார்த்தை காதல்
இதயத்தின் வாழ்க்கை காதல்
சிந்திக்க மறக்கும் காதல்
சிறகினை ஒடுக்கும் காதல்
சாதனை தொலைக்கும் காதல்
சவமாகும் வரை விடாது காதல்
அழகை பார்ப்பதல்ல காதல்
அழுகை வரமால் பார்ப்பதே காதல்
உணர்ச்சிகள் மட்டுமல்ல காதல்
உயிரின் உருவமாய் நிற்பதே காதல்