இணங்கி வாழ்க

அன்பு மொழியும் கூட
அக்கம் பக்கம் பார்த்து
அடக்கத்தோடு பேசிட
அமையும் நல்லருள் வழியடா...

நாவடக்கமின்றி போலி
நாடக வார்த்தைஜாலம்
நாடினால் தன்வாயால் கெடும்
நுணலின் அவதி விளையுமடா..

இன்முகம் காட்டி
இதமாய் பழகி ஊரோடு
இணங்கி வாழும் காலம்
இன்பத்தேனாகும் வாழ்வடா...!!

... நாகினி

எழுதியவர் : நாகினி (18-Jan-14, 10:43 pm)
பார்வை : 62

மேலே