- கருத்திலே பூத்தது -கவின் சாரலனுக்குப் பாராட்டு
இது யாரையும் புண்படுத்த எழுதப்படவில்லை. பல சமயங்களில் பிறருடைய நல்ல கவிதை வரிகள் நம்முள் எழுதிப் பார்க்க ஒரு உந்துதலை ஏற்படுத்துவன என்பதற்கு ஒரு சாட்சியாகவே இது இங்கு பதியப்படுகிறது.
====
இனி கவிதை:
====தட்டாது இன்பம் தமிழ் படிக்க===
முட்டாமல் கன்றுக்கும்
முடியாதே பாலுண்ண;
தொட்டால்தான் பெண்ணுமே
துடிப்புனக்குள் தூண்டிடுவாள்!
சுட்டால்தான் சட்டியுமே
சுவையுணவு தரவுதவும்;
விட்டால்தான் ஆசையுமே
வியனுலகில் அமைதிதரும்!
எட்டாத பொருளறிய
எம்மொழியும் வேண்டாமே!
தட்டாத இன்பமெலாம்
தமிழ்படிக்க நீபெறுவாய்!
===
171507-என்ற எண்ணின் கீழ் ஒரு கவிதை எழுதி இந்த உந்துதலை எனக்குள் ஏற்ப்படுத்திய கவின் சாரலனுக்கு - எனது பாராட்டுகளை மட்டுமல்ல நன்றியினையும் சமர்ப்பிக்கின்றேன்.
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
