நம் தமிழ் அழகு

என் அன்னை
தமிழன்னை அழகு
அவள் தந்த
தமிழ் மொழி அழகு

வள்ளுவனின்
இருவரி பொதுமறை அழகு
அவ்வையின்
அறம் சொன்ன ஆத்திச்சூடி அழகு

கம்பனின்
கவி அழகு
பாரதியின்
கவிப்போர் அழகு

பாவேந்தனின்
புது சிந்தனை அழகு
கவியரசின்
எதார்த்த கவி அழகு

இவையாவும் உடைய
நம் மொழி அழகு

நம் தமிழ் அழகு !!!

எழுதியவர் : ஸ்ரீனிவாசன் (19-Jan-14, 11:28 am)
Tanglish : nam thamizh alagu
பார்வை : 1006

மேலே