மெய் என்று அறிந்தால்
நம்பிக்கை தான் வாழ்க்கை
நம்பி னார் கெடுவதில்லை
நம்புவது யாரை?
நம்புவது எதை?
அதை செய்தால் சரியாக
அதுவே வழி காட்டும் பாதை.
இறைவனை நம்புவன் ஆத்திகன்
என்று கொள்ளலாம் அநேகமாக
அருளைக் கண்டவன்
தொழுகிறான் கூப்பிய கைகளோடு
அவன் வழி அதுவே.
இறைவனே இல்லை என்பவன் நாத்திகன்
என்று அனுமானிக்கலாம் பெரிதுமாக
வாழ்வைக் கண்டவன்
படிகிறான் மனச்சாட்ச்சிக்கு நெறியோடு
அவன் பாதை அதுவே.
கூட்டிக் கழித்துப் பார்த்தால்
ஆத்திகனும் நாத்திகனும் நம்புவது உண்மை
ஒருவன் பணிகிறான் பரம் பொருளுக்கு
மற்றவன் நடக்கிறான் மெய்யான நோக்கிலே
அதவும் இதுவும் ஒன்றே
யாதும் , யாவதும் ஒன்றே
அது இது மெய் என்று அறிந்தால்