தங்கத் தமிழ்
வாசமெல்லாம் மலருக்குச் சொந்தமா ?
வளரும் பயிரெல்லாம் பூமிக்குச் சொந்தமா ?
தேனிருக்கும் பூவெல்லாம் தேன் ஈக்கு சொந்தமா?
திகட்டும் பாலிருக்க,
திகட்டாத தமிழிருக்க,
தேனினும் இனிய தமிழ் யாருக்குச் சொந்தம் ?
தெள்ளு தமிழ் பாட்டால்,
தினம் தினம் சொல்லங்காரம் கண்டு,
கூடிடும் இளமையும்,
கூடும் சுவையும்,
கரை புரண்டோடும்,
காவியங்கள் ,காப்பியங்கள் ,
கண்ட சீரிளம் மொழியே !
மங்காத புகழும், மறவர் பெருமையோடு ,
மதித்து வாழும் நிலமே,
கொடுத்துச் சிறக்கும் மனமே,
தமிழர் என்ற இனமே,
சீரோங்கும் தமிழும்,
சிறப்பொக்கும் மொழியும்,
பண்பாட்டு படியும்,
தெளிந்த நல் அறிவும்,
நாளும் வளரும் நாடாம்,
நாடு, தமிழ் நாடு.
தமிழ் நாட்டுத் தமிழருக்கே,
சொந்தம் தங்கத் தமிழ்.