crazysrini - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : crazysrini |
இடம் | : Chennai |
பிறந்த தேதி | : 15-May-1985 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 29-Dec-2013 |
பார்த்தவர்கள் | : 75 |
புள்ளி | : 10 |
ஏர் பூட்டி
நீ உழுதாய்
சோற்றினில் நாங்கள்
கை வைத்திடவே !
எத்தனை வியர்வைத்துளி
நீ விதைத்தாய்
ஒற்றை நெல்மணி
கதிர் அறுத்திடவே !
நீ சிதறாமல் அறுத்திடும்
ஒவ்வொரு நெல்மணியிலும்
எங்கள் ஒரு வேளை
பசி அடங்குது ஐயா !
வணங்கும் தெய்வங்கள்
ஆயிரம் ஆனாலும்
பசி தீர்க்கும் எங்கள்
ஒற்றை தெய்வம் நீங்கள் ஐயா !
எத்தொழில் நாங்கள் செய்யினும்
உன் தொழில் முழு ஆதாரமே
அத்தொழில் நீ விடுவாய் எனில்
எங்கள் அகத்தொழிலும் நின்றிடுமே !
உன் வாழ்க்கை உயர்த்திடவே
ஒரு பொழுதேயினும் முயன்றிடுவோம்
இனி ஒன்றும் கவலையில்லை
இனிதே பொங்கட்டும் இப்பொங்கல் !!
பொங்கல் நல்வாழ்த்துக்கள் !!!
நீ மீட்டும்
ஓர் வீணை போல்
நான் ஆனேன்
ஓர் இசையாக !!
நீ பார்க்கும்
எண் திசை யாவும்
நான் ஆவேன்
ஓர் காற்றாக !!
எங்களுக்குள் பந்தங்கள் உண்டு
ஆனால் சந்தேகங்கள் இல்லை
எங்களுக்குள் போட்டிகள் உண்டு
ஆனால் பொறாமைகள் இல்லை
எங்களுக்குள் தோல்விகள் உண்டு
ஆனால் கவலைகள் இல்லை
எங்களுக்குள் அழுகைகள் உண்டு
ஆனால் அவஸ்தைகள் இல்லை
எங்களுக்குள் நட்புகள் உண்டு
ஆனால் நாடகங்கள் இல்லை
முடி முதல் அடி வரை
முழுவதும் அறிமுகம் !
விழியினின் மையத்தில்
புது வித அறிமுகம் !
காற்றினின் வாசத்தில்
பூக்களோ அறிமுகம் !
மழலையின் முகத்தினில்
தாயவள் அறிமுகம் !
அகிலத்தின் அனைத்திலும்
அவள் முகம் அறிமுகம் !!
இரவின் வெளிச்சம்
நீ-ஆனதால்,
பகலின் நிழல்
நான்-ஆனேன் !