விவசாய தோழனுக்கு

ஏர் பூட்டி
நீ உழுதாய்
சோற்றினில் நாங்கள்
கை வைத்திடவே !

எத்தனை வியர்வைத்துளி
நீ விதைத்தாய்
ஒற்றை நெல்மணி
கதிர் அறுத்திடவே !

நீ சிதறாமல் அறுத்திடும்
ஒவ்வொரு நெல்மணியிலும்
எங்கள் ஒரு வேளை
பசி அடங்குது ஐயா !

வணங்கும் தெய்வங்கள்
ஆயிரம் ஆனாலும்
பசி தீர்க்கும் எங்கள்
ஒற்றை தெய்வம் நீங்கள் ஐயா !

எத்தொழில் நாங்கள் செய்யினும்
உன் தொழில் முழு ஆதாரமே
அத்தொழில் நீ விடுவாய் எனில்
எங்கள் அகத்தொழிலும் நின்றிடுமே !

உன் வாழ்க்கை உயர்த்திடவே
ஒரு பொழுதேயினும் முயன்றிடுவோம்
இனி ஒன்றும் கவலையில்லை
இனிதே பொங்கட்டும் இப்பொங்கல் !!

பொங்கல் நல்வாழ்த்துக்கள் !!!

எழுதியவர் : ஸ்ரீனிவாசன் (20-Jan-15, 8:01 pm)
பார்வை : 161

மேலே