குழந்தையின் நட்பு

எங்களுக்குள் பந்தங்கள் உண்டு
ஆனால் சந்தேகங்கள் இல்லை
எங்களுக்குள் போட்டிகள் உண்டு
ஆனால் பொறாமைகள் இல்லை
எங்களுக்குள் தோல்விகள் உண்டு
ஆனால் கவலைகள் இல்லை
எங்களுக்குள் அழுகைகள் உண்டு
ஆனால் அவஸ்தைகள் இல்லை
எங்களுக்குள் நட்புகள் உண்டு
ஆனால் நாடகங்கள் இல்லை