அன்பாய் நாம் வாழ்வோம்
அன்பாய் நாம் வாழ்வோம்!!!
அன்பென்னும் விதை ஊன்றி
ஆசையோடு நாம் வாழ
இன்பமாய் இப்புவியில்
ஈடு இணை இல்லாமல்
உன்னதமாய் நாம் வாழ
ஊரார் போற்றும் படி
எல்லோர் ஆசிர்வதித்து
ஏற்றம் பல பெற்று
ஐந்து புலன் கிடைக்க
ஒற்றுமையாய் நாம் வாழ்ந்திடுவோம்
ஓராண்டு ஆயிரம் இப்புவியில்
ஔவையார் பாரட்டும் படி
:. தே வாழ்ந்திடலாம்..