பிரிவு தந்தை மகனுக்கு
பிரிவு, வேதனை என்று
பிதற்ற மாட்டேன்
வளர்ச்சி வரும் போது
பிரிவோடு பிறந்தே வரலாம்
மரத்தை விட்டு
கனி பிரியாதிருந்தால்
மண்ணில் மற்றொரு மரம்
எப்படிச் சாத்தியம்?
வாழ்க்கையின் முழுமையில்
பிரிவும் ஒரு பகுதியே!
ஒரே வேரால்
உரிஞ்சப்படும் நீர்
கொஞ்சம் ரோஜாவுக்கும்
கொஞ்சம் முள்ளுக்கும்
இரண்டும் சேர்த்துதான்
அதன் முழுமை.இப்படித்தான்
வாழ்க்கையின் முழுமையும்,
முள்ளைப் போல பிரிவும்
முழுமையின் ஒரு பகுதியே!
துன்பம் வரும்போது
துடிப்பிழக்கக் கூடாது?
இன்பம் பருகிட
இயற்கை செய்த
முன்னேற்பாடு அது
உணவின் சுவைகூட்ட
உணவுக்கு முன் தரப்படும்
"சூப்" போல;