அண்டை தேசம் தந்தை மகனுக்கு

அண்டை தேசம் பற்றியும்
அறிந்து கொள்....
புத்தனின் மடாலயம் கூட
புரியாமலேயே கொலையான
அப்பாவிகளின் எலும்புகளாலேயே
அமைகிறது நம்
அண்டை தேசத்தில்!
இரத்தம் மட்டுமே - அவர்கள்
இரசிக்கும் பொருளாக....
உயிரற்ற உடல்கள் மட்டுமே - அவர்கள்
உருட்டி விளையாடும்
செப்பு பொம்மைகளாக!
ஆட்சியாளர்கள் எடுத்துக்கொண்ட
உறுதி மொழியின்
ஒவ்வொரு எழுத்துக்கும்
சில நூறு கொலைகள்.....
அவர்கள்
இரத்தக் குழாய்களிலே
இரத்தத்தை வடித்துவிட்டு
இரத்த வெறியை
நிறைத்துக் கொண்டவர்கள்.
இனப்பகை மனதில் சுமந்து - தேசமெங்கும்
பிணம் குவிக்கும் பேரினவாதிகள்;
பகிர்ந்து கொள்ள மனமின்றி
உதிர்ந்து போகிறார்கள்;
இப்படித்தானடா - நம்
அண்டை தேசம்
சண்டை தேசமாகி
சங்கடம் செய்கிறது.

எழுதியவர் : (19-Jan-14, 5:43 pm)
பார்வை : 38

மேலே