முரண்

மரப்பலகையில் ஓர் அறிவிப்பு
மரங்களை வெட்டாதீர்!
கரிய புகை கக்கும் பேருந்தில்
புகை பிடிக்காதீர் விளம்பரம்!
இறக்கைகள் இருந்தும்
பறக்க முடியாத
மின் விசிறிகள்!
முன்னுக்கு பின்
முரண் தான்!
முரணோடு அறனோடு
வாழ்ந்தால் நலம் தான்!
எதிர்பார்த்த ஏற்றம் படைக்க
முரண்பட்ட உலகில்
முன்னேற்றம் காண
முயற்சிப்போம்!!

எழுதியவர் : சௌம்யா தினேஷ் (19-Jan-14, 5:54 pm)
Tanglish : muran
பார்வை : 165

சிறந்த கவிதைகள்

மேலே