வருத்த படாத வாலிபர் சங்கம்

நாளைய தினம்?
எங்களுக்கு தேவை இல்லை
நேற்றைய தினம்?
அது பழைய கதை
இன்றைய தினம்?
தடுத்து நிறுத்த யாரும் இல்லை

சொன்னதை செய்வோம்
சொல்லாததை செய்வோம்
சொன்னபடி கேக்கவே மாட்டோம்

சிரிச்சு சிரிச்சு பேசுவோம்
சீரிசாக பேசுவோம்
மனசுல எதையும் வைச்சுக்கவே மாட்டோம்

பாசகார பசங்க நாங்க
பாக்காம இருக்கவே மாட்டோம்
சொலவு வந்தா
காச வெளிய எடுக்கவே மாட்டோம்

தல படத்தை பார்ப்போம்
தளபதி படத்தையும் பார்ப்போம்
கதையை மட்டும் பார்க்கவே மாட்டோம்

கான பாட்டு பாடிடுவோம்
கவிதை எல்லாம் எழுதிடுவோம்
அரியர் இல்லமால் டிகிரி வாங்கவே மாட்டோம்

வருத்த படாத வாலிபர் சங்கம்
நாங்க வருத்த படாத வாலிபர் சங்கம்

எழுதியவர் : PAUL (19-Jan-14, 8:08 pm)
பார்வை : 370

மேலே