வீறு கொண்டு எழு தமிழா
முன்நிற்கிறது மக்கள் தொகையிலே நம்நாடு -அது
பின்னேநிற்கிறது மற்ற வகையிலே பிற்பாடு
சிந்தும் வியர்வையும் செல்லா காசாகிறது - அங்கே
எந்தம் மக்கள் இரத்தமும் வீணாகிறது
ஒற்றுமை உளிஏந்தி செதுக்குவோம் சிலை -அதில்
ஒளிரும் சக்தியென மாறட்டும் தமிழர்நிலை
ஒற்றுமை தமிழரின் நல் உழைப்பினால்-நாளை
ஒளிரும் டாலரும் ரூபாயிடம் மண்டியிடும்நிலை
விந்தைவசதி அன்றியும் ஒற்றுமை காத்து -அவன்
வீரத்தாலே வீழ்த்தினானே எதிரிகளை பழந்தமிழன்
வழிவந்த நாமும் வீழ்ந்து போவோமோ - நமக்குள்
வளரும் ஒற்றுமை இல்லாமல் மண்ணின்கீழும்
ஒருகூட்டம் குரல்கொடுக்க வலி பிறக்கும் - நாம்
ஒன்றாகி நாடே குரல்கொடுக்க வழிபிறக்குமே
வீணாகிய நாட்களுக்கும் வீறுகொண்டு எழு -அதில்
வீண்வம்பிட வருவோரும் வீழ்ந்து போகட்டும்
விழும் தமிழனை கேலி செய்தது போதும் -நாம்
விடாமல் கைகொடுத்து தூக்கிடுவோம் அவன்
வெற்றியை கைதட்டி ஊக்குவிப்போம் -தட்டும்
வெறிசத்தம் வானின் இடியும் தோற்கட்டும்!
ஏழைநாடென்றது போதும் கோழைநாடாய் -நாம்
ஏளனப்படுமுன் ஒற்றுமையாய் எழுந்துவா தமிழா!
விடியுமென இனியும் அமைதி கொண்டால் -நாளை
வீழும்உடலுக்கு ஈமம் செய்ய ஆளின்றிபோகும்.
...கவியாழினிசரண்யா...
20 சனவரி 2014