தமிழின ஒற்றுமையும் , அவசியமும்
உலகில் எல்லா மக்களும் இனியவாழ்வு உடையவராக
வாழவேண்டும் என்பதே தமிழின மக்களின் நோக்கம் !
உலக தமிழர்க்கு ஒரு நீதி, தமிழ் அல்லார்க்கு ஒரு நீதி,
என்று வேறுபடுத்திடவில்லை தமிழின மக்கள்
உலகிற்கு வாழ்வழிக்கும் கதிரவன், சந்திரன் போன்று உலக
மக்களை அன்புடன் வாழவைப்பவர்கள் தமிழன மக்கள் !
நாட்டுவேற்றுமை,இன ,மொழிவேற்றுமை இனி இல்லை
தமிழ் பண்பாட்டு ஒற்றுமைக்கு திருக்குறள் ஒன்றே சான்று !
அதுபோன்று புறநானுறு , சம்பந்தர் தேவாரம் , தாயுமானவர் , இராமலிங்கஅடிகளார், பாரதியார், பாடல்களும் சான்று !
தமிழரையும் , தமிழர் நாகரீகத்தையும் ,
ஒற்றுமையையும் தமிழ் மொழியையும் பிரித்து பேசுவோர்
தமிழுக்கு நன்மை செய்பவர்களா ? தமிழினத்தில்
வெறுப்பையும், பிளவையும் விதைகின்றனர் ,
தமிழ்நாகரிகம் தனிப்பட்டது , இலக்கிய பண்புடையது
தமிழினம் தனித்து வாழவேண்டும் , பிற இனத்தின்
கூட்டுறவு தமிழுக்கு கூடாது என்ற உரைகள் வேறோடு
களைய தமிழின ஒற்றுமை அவசியம் , அவசியம் !
தமிழர்க்கு குறுகிய குணம் இல்லை , தன்னலம் மட்டும்
பெரிதாக கருதியதில்லை ! சாக்கடை புழுக்களாக,
கிணற்று தவளைகளாக வாழ விரும்பவில்லை ,
உலகத்தோடு இணைந்தே வாழ விரும்புகிறார்கள் .!
தமிழின ஒற்றுமை ஓங்குக ! தமிழின ஒற்றுமை ஓங்குக !
---சேதுராமலிங்கம்.உ
20 சனவரி 2014