ஒற்றுமை சங்கிலியால் இணை பொங்கல் கவிதை போட்டி

ஏழ்கடலனினை துளைத்து விஞ்ஞானத்தையும்
மெய்ஞானத்தையும் மெய்சிலிர்க்க வைக்கும்
வள்ளுவன் முப்பாலுக்கு ஈடாகுமா இவ்வையம் !
அகம்புறமென அனைத்திற்கும் இலக்கணம்
அமைந்திருக்கும் நம்தாய் மொழிக்குநிகர்
செம்மொழியான நம்மொழியென நிமிர்ந்துநில் .

இலக்கண இலக்கியத்தோடு மிளிரும் -சிலபல
காவியங்களும் காப்பியங்களும் நம்மொழிதவிர
எம்மொழியிலும் உண்டோயென மார்தட்டிசொல்
போரில் புறமுதுகிட்டானென கொந்தளித்து
மகனெஞ்சில் ஈட்டிக்கண்டு கோபம்தணிந்த
வீரத்தாய் தமிழென வீறுகொண்டெழு

ஆறிருகோடியே அங்குமிங்கும் அலைந்து
திரியும் ஆற்றல்மிக்க தமிழனே !வீரமிக்க
தமிழனமே உன்படை கூடினால் பாரே
தூசியடா ஒற்றுமையுடன் நடைபோட்டால்
உன்சுவடைகூட வரலாறு பதியுமடா
உன்னிமை முடியெடுக்க இமயமும் வளையுமடா .

ஒற்றுமை சங்கிலியால் இணை
உன்வீரத்தை உலகறியச்செய்
தமிழனென்றால் சாதனையாளனென
சாதிக்க பிறந்தவனென சங்ககால
தமிழனாய் மீண்டும் இலக்கை அடைந்திடு ..

எழுதியவர் : ப்ரியாஅசோக் (20-Jan-14, 11:38 pm)
பார்வை : 82

மேலே