அகிலத்தில் ஒரு அமைதிப்புறா பொங்கல் கவிதை போட்டி

அகிலம் போற்றும் தமிழினம்
அன்பு நல்கும் தமிழ் மனம்
இல்லாரை இனம் கூட்டும் தமிழினம்
வந்தாரை வாழவைக்கும் தமிழ் மனம்

பொன்னும் பொருளும் தமிழனின்
பெருமை கண்டு பொருமும்
தமிழனின் தலைமுறை கண்டு
தாயகம் கூட தவிக்கும்

தமிழனின் தடம் பதிந்த மண்ணும்
தமிழினத்தின் பெருமை பேசும்
தரணியும் தமிழனின் புரணி பேசும்
எனினும் ஏனோ ஒரு ஏக்கம்

தலைக்கனமாய் தமிழ் கவசம் இருந்தும்
தமிழினம் காக்க தவறிவிட்டோம்
கையெட்டும் தூரம் இருந்தும் தமிழினம்
காவு கொடுக்கும் காட்சிகளை கானது இருந்தோம்

உடைந்து போன விரிசலை சீரமைத்து
ஒற்றுமையென்னும் சிறகு ஆக்குவோம்
அதில் வட்டமடித்து பாரெங்கும் தமிழன்
ஒற்றுமை பலத்தை பறைசாற்றுவோம்

அகிலமெங்கும் அமைதிபுறாக்களை
அணிவகுத்து செல்லவைப்போம்
அதை தமிழினத்தின் வழிமுறையென
தரணியெல்லாம் பாட செய்வோம்

க.அழகர்சாமி 20-Jan-2014

எழுதியவர் : cifnet (20-Jan-14, 11:39 pm)
பார்வை : 90

மேலே