வாகை சூடிடுவோம் பொங்கல் கவிதை போட்டி

தலையோங்கிய அரசியல் சுயநலத்தால்
தலைமைத்துவம் இன்றி தவிக்கிறோமே..?
ஒற்றுமையின்றி வேற்றுமையால்
ஈழத்தில் தமிழினம் மடிந்துப்போனதே ?

அண்டிப்பிழைக்க வந்த பூனைகள்
சீண்டிப்பார்க்கிறது நம் புலிகளின் வால்களை.
வீரமின்றி நமது மானம் போகலாமா?
தன்னலம் ஓங்கி தமிழினம் அழியலாமா?

உலகை ஆண்ட நாம் - வீர
வல்லமை மறந்து விட்டோமே
புலம்பெயர்ந்து பலம் இழக்கிறோமே.
நாம் ஆண்டவர்களை நம்மை ஆளலாமோ ?

வாள் வீசிய வம்சம் நாம்
சோர்ந்து வீழ்ந்து போகலாமா?
சேர்ந்து எதிர்த்து குரல்கொடுத்து
தன்மான உணர்வுடன் வாழ்ந்திடுவோமே.

குமரிக்கண்டம் புதைந்தால் என்ன?
குமறி வெடிக்கட்டும் வீரம் !
சிதறி கிடந்தது போதும்
சிதறாமல் தமிழினம் காத்திடுவோம் !

மூவேந்தர்களாக ஒன்றுப்படுவோம்
முக்கொடிகளை இமயத்தில் ஏற்றிடுவோம் !
முத்தமிழை பாதுகாப்போம் -மீண்டும்
இவ்வுலகை வாகைசூடி ஆண்டிடுவோம்..!


-------------------இரா.சந்தோஷ் குமார்

எழுதியவர் : Santhosh Kumar1111 20-Jan-2014 (20-Jan-14, 11:40 pm)
பார்வை : 102

மேலே