கூடி பொங்கிடும் பொன்னாள் பொங்கல் கவிதை போட்டி

..........................................................
இனிப்பு மட்டுமே எம்மை சுற்றிடும்
அந்த திருநாளில்
நல்லெண்ணம் மட்டுமே
மனதில் அலைபாய்திடும்

நம்மை வாழ வைத்திடும்
வீர உழவர்களுக்காய்
ஒன்று கூடிடும்
அற்புத திருநாளிது

மச்சம் குடிபோதையதை மறந்து
ஒன்று கூடிட்டு
ஆலயங்களில் விடா மணியோசை
ஒலித்திட
ஓர் பொங்கல் பானையைச்
சுற்றி ஓர்
ஊரே கூடிடும்
மங்கல நாளிது

உலக தமிழர் அமைதியாய்
கொண்டாட்டங்களுடன்
கூடி பொங்கிடும்
பொன்னாளிது.

---------------------s.shanmugapriya 20-Jan-2014

எழுதியவர் : s.shanmugapriya (20-Jan-14, 11:41 pm)
பார்வை : 178

மேலே